'இந்தியா இன் ஸ்பேஸ்' என்ற பெயரில், இஸ்ரோவின் சாதனைகளை பறைசாற்றும் சுவர் அருங்காட்சியகம் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. டோம்லரில் உள்ள பெங்களூரு சர்வதேச மையத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ந்த இஸ்ரோவின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்ரோவின் தொடக்க காலத்தில் இருந்த ரோகினி, ஆரியபட்டா போன்ற திட்டங்களுடன், எதிர்கால திட்டமான ககன்யான் வரை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 25க்கும் மேற்பட்ட இஸ்ரோ திட்டங்களின் மாதிரி வடிவங்கள், தொழில்நுட்ப விவரங்கள் ஆகியவை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. 7 X 7 அடியில் உள்ள மர அறையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.