சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்ப திட்டம்

September 11, 2023

வரும் 2024 ஆம் ஆண்டு, இந்திய விண்வெளி வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் விண்வெளி திட்டங்களின் தீவிர பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக இந்தியா மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளன. ஜி 20 மாநாட்டுக்காக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவின் சந்திரயான் 3 விண்வெளி திட்டத்தின் வரலாற்று வெற்றிக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், […]

வரும் 2024 ஆம் ஆண்டு, இந்திய விண்வெளி வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் விண்வெளி திட்டங்களின் தீவிர பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக இந்தியா மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளன.

ஜி 20 மாநாட்டுக்காக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவின் சந்திரயான் 3 விண்வெளி திட்டத்தின் வரலாற்று வெற்றிக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், ஆதித்யா எல் 1 சூரிய திட்டம் முழுமையான வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், கடந்த ஜூன் மாதம், நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தில் தெரிவிக்கப்பட்டது போல, அடுத்த ஆண்டில் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்தார். மேலும், அறிவியல் மற்றும் விண்வெளி துறையில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளதாகவும், திட்டங்களுக்கான தீவிர பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu