இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த சாதனையாளர் பிரிவில் இந்தியன் ஆப் தி இயர் விருதை வழங்கியுள்ளார்.
சிறந்த சாதனையாளர் என்ற பிரிவில் இந்தியன் ஆப் தி இயர் 2023 விருதினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வழங்கியுள்ளார். இந்த விருதானது விண்வெளி ஆராய்ச்சி நிலைகளில் விரிவாக்கம் செய்வதில் இஸ்ரோவின் சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான குறிப்பில் 2023 ஆம் ஆண்டில் இஸ்ரோ சந்தேகத்திற்கு இடம் இன்றி அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதில் ஈடு இணையற்ற ஆற்றலையும் மீள் திறனையும் வெளிப்படுத்தியது. மேலும் இது வரலாற்று புத்தகங்களில் பொறிக்கப்பட்ட காலமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் உச்சகட்ட சாதனையாக இஸ்ரோ சந்திராயன் -3 செயற்கை கோளை நிலவின் அறியப்படாத தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக மென்மையாக தரை இறங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.