டார்க் வெப்பில் இந்தியன் ரயில்வேயின் 30 மில்லியன் வாடிக்கையாளர் தரவுகள் விற்பனை

December 29, 2022

இந்தியன் ரயில்வேயின் தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் 30 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரயில்வே தரவுகளை ஹேக் செய்தவர், ரயில்வே துறையின் பெரிய அளவிலான டேட்டா பேஸ் தன் வசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, பயணச்சீட்டு பதிவின் போது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் வாடிக்கையாளரின் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹேக்கர் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில், 30 […]

இந்தியன் ரயில்வேயின் தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் 30 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரயில்வே தரவுகளை ஹேக் செய்தவர், ரயில்வே துறையின் பெரிய அளவிலான டேட்டா பேஸ் தன் வசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, பயணச்சீட்டு பதிவின் போது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் வாடிக்கையாளரின் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹேக்கர் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில், 30 மில்லியன் தரவுகளில் அரசாங்க மின்னஞ்சல் முகவரிகள், பிரபலங்களின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக, எய்ம்ஸ் மருத்துவமனை சைபர் தாக்குதலுக்கு உள்ளான போது, லட்சக்கணக்கான நோயாளிகளின் தரவுகள் கசிந்தன. அவற்றை மீட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது, இந்தியன் ரயில்வே சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 321

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu