கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 20% உயர்வை பதிவு செய்துள்ளதாக வாகன டீலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
"கடந்த ஆகஸ்ட் மாத வாகன விற்பனையுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் 3.5% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருடாந்திர அடிப்படையில் 20% உயர்வு பதிவாகியுள்ளது. பண்டிகை காலம் தொடங்கி உள்ளதால், அடுத்த 42 நாட்களுக்கு விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" இவ்வாறு வாகன டீலர்கள் அமைப்பின் தலைவர் மணிஷ் ராஜ் சிங்கானியா தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில், இருசக்கர வாகன விற்பனை 22%, பயணிகள் வாகன விற்பனை 19%, மூன்று சக்கர வாகன விற்பனை 49% மற்றும் சரக்கு வாகன விற்பனை 5% உயர்ந்துள்ளன. அதே சமயத்தில், டிராக்டர்கள் விற்பனை 10% சரிந்துள்ளது.