சமையல் எண்ணெய் இறக்குமதியில் வரலாற்று உச்சம்

July 24, 2024

பாமாயில் கொள்முதல் அதிகரித்துள்ளதால், ஜூலை மாதத்தில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி வரலாற்று உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத் தரவுகளின் படி, பனை, சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் இறக்குமதி 1.6 மில்லியன் டன்கள் அளவைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2022 ஆகஸ்ட் மாத இறக்குமதி அளவான 1.5 மில்லியன் டன்கள் என்ற முந்தைய உச்சபட்ச சாதனையை முறியடிக்கும். இந்தியாவை பொறுத்தவரை, சமையல் எண்ணெய் இறக்குமதியின் பெரும்பங்கு பாமாயில் […]

பாமாயில் கொள்முதல் அதிகரித்துள்ளதால், ஜூலை மாதத்தில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி வரலாற்று உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத் தரவுகளின் படி, பனை, சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் இறக்குமதி 1.6 மில்லியன் டன்கள் அளவைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2022 ஆகஸ்ட் மாத இறக்குமதி அளவான 1.5 மில்லியன் டன்கள் என்ற முந்தைய உச்சபட்ச சாதனையை முறியடிக்கும்.

இந்தியாவை பொறுத்தவரை, சமையல் எண்ணெய் இறக்குமதியின் பெரும்பங்கு பாமாயில் இறக்குமதி ஆகும். இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 60% பாமாயில் இறக்குமதி ஆகும். கடந்த வருட ஜூலை மாதத்தில், 590000 டன்னாக இருந்த பாமாயில் இறக்குமதி, இந்த வருடத்தில் 960000 டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu