இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, லாபம் ஈட்டுவதில் உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இண்டிகோ நிறுவனத்தின் நிகர லாபம் 1422 கோடியாக பதிவாகியுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 1000% அதிகமாகும். அத்துடன், இண்டிகோ நிறுவனத்தின் வருவாய் 61% உயர்ந்து, 14932 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், இண்டிகோ நிறுவனத்திற்கு பயணச்சீட்டு கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் 63% உயர்ந்து, 13162 கோடியாக பதிவாகி உள்ளது. இதர வருவாய் 25% உயர்ந்து, 1422 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாப உயர்வு பதிவானது குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், இண்டிகோ நிறுவனத்தின் விமான கொள்ளளவு 25% உயர்த்தப்பட்டதாகவும், பயணிகள் எண்ணிக்கை 26% உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம், கடந்த ஆண்டில், புதிதாக 300 விமானங்களை இயக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.