இந்தோனேசிய அதிபர் தேர்தலில் பாதுகாப்பு அமைச்சர் பிரபாவோ வெற்றி பெற்றுள்ளார்.
இந்தோனேசியாவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பிரபாவோ மற்றும் முன்னாள் கவர்னர்கள் அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரணவ் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பிரபாவோ தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் பிரபாவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்னும் அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்கவில்லை. இதற்கு இடையே தலைநகர் ஜகாத்தாவில் ஒரு விளையாட்டு அரங்கத்தின் முன் தன்னுடைய பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பிரபாவோ பேசினார். அப்போது அவர் தனது வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்று கூறினார்.