கேரள மாநில எல்லை பகுதிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் இருந்து வருகின்றனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தொற்று உறுதியானதால் தமிழகத்தில் தொற்று பரவாமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக எல்லை பகுதிகளில் கால்நடை மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து கேரளாவில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழகத்தில் அனுப்பி வருகின்றனர். இந்த தொற்று தீவிரமாக பரவக்கூடியது என்பதால் கண்காணிப்பு மேலும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளாக 50 அதிவிரைவு செயலக குழு அமைப்பு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் மற்றும் புறக்கடை கோழிகளை நேரில் செய்து ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து வருகிறது. பறவைகள் சரணாலயம் தினமும் பார்வையிட்டு நோய் அறிகுறிகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது