ஹமாஸ் இயக்கத்தின் சுமார் 300 இலக்குகளை வான்வழி தாக்குதல் மூலம் அழித்ததாக இஸ்ரேல் ராணுவ படை கூறியுள்ளது.காசா ஹமாசிடையே 45 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் சுமார் 300 இலக்குகளை வான்வழி தாக்குதல் மூலம் அழித்ததாக இஸ்ரேல் ராணுவ படை கூறியுள்ளது. பதுங்கிடங்களில் உள்ள ஆயுதங்களை கண்டறிந்து அவற்றை இராணுவ வீரர்கள் அழித்தனர்.
தற்காலிக போர் நிறுத்தம் இன்று முதல் அமலாக உள்ளது என்று கத்தார் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையின் பேரில் இரு தரப்பும் பரஸ்பரம் கைதிகளை விடுவிக்க உள்ளது. இஸ்ரேல் உள்ளூர் நேரப்படி அதிகாலை 7 மணி முதல் போர் நிறுத்தம் அமலாகும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக குழுவில் இருந்து 13 இஸ்ரேல் பிணை கைதிகள் இன்று பிற்பகல் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் இதற்கு ஈடான பாலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கை இன்னும் தெரிவிக்கப்படவில்லை.முன்னதாக இஸ்ரேல் மீது லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா குழுவினர் நேற்று 50க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.