கல்லூரி மாணவர்களுக்கு வான் அறிவியல் குறித்த இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு - இஸ்ரோ அறிவிப்பு

வானியல் மற்றும் வான் அறிவியல் தொடர்பாக போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கு இந்திய வானியல் ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. START என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இலவச ஆன்லைன் பயிற்சி, இளநிலை மற்றும் முதுநிலை அறிவியல் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 முதல் 3 வாரங்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி […]

வானியல் மற்றும் வான் அறிவியல் தொடர்பாக போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கு இந்திய வானியல் ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. START என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இலவச ஆன்லைன் பயிற்சி, இளநிலை மற்றும் முதுநிலை அறிவியல் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 முதல் 3 வாரங்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு வகுப்புகள் நடைபெறும். இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்த வகுப்பை பிற துறை மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://elearning.iirs.gov.in/edusatregistration/student என்ற இணையதள முகவரியில், இஸ்ரோ பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இந்த திட்டத்தில் பங்கேற்க மாணவர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், பொதுமக்களும் இந்த வகுப்புகளில் பங்கேற்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சாதாரண மக்கள், https://www.youtube.com/@edusat2004 என்ற தளத்தில் வகுப்புகளை காணலாம் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu