ஜப்பானின் ஐஸ்பேஸ் நிலவை ஆராய லேண்டரை அனுப்பியது

December 12, 2022

ஜப்பானின் ஐஸ்பேஸ் பால்கன்-9 ராக்கெட்டுடன் லேண்டரை நிலவுக்கு அனுப்பியது. ஜப்பானை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஐ-ஸ்பேஸ் நிலவை ஆய்வு செய்வதற்காக ஹகுடோ-ஆர் என்ற லேண்டரை உருவாக்கியது. இந்த லேண்டரை அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்ப ஐ-ஸ்பேஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. அதன்படி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் இருந்து நேற்று காலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் […]

ஜப்பானின் ஐஸ்பேஸ் பால்கன்-9 ராக்கெட்டுடன் லேண்டரை நிலவுக்கு அனுப்பியது.

ஜப்பானை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஐ-ஸ்பேஸ் நிலவை ஆய்வு செய்வதற்காக ஹகுடோ-ஆர் என்ற லேண்டரை உருவாக்கியது. இந்த லேண்டரை அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்ப ஐ-ஸ்பேஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.

அதன்படி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் இருந்து நேற்று காலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் நிலவுக்கு புறப்பட்டது. இதன் மூலம் நிலவுக்கு லேண்டரை அனுப்பிய உலகின் முதல் தனியார் நிறுவனம் என்கிற பெயரை ஐ-ஸ்பேஸ் நிறுவனம் பெறுகிறது. பால்கன்-9 ராக்கெட்டில் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் 'ரஷீத்' என்கிற ரோவரும், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் 'பிளாஷ் லைட்' செயற்கைக்கோளும், ஜப்பானின் மற்றொரு தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிறிய ரோபோவும் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டர் நிலவை சென்றடைவதற்கு 5 மாதங்கள் ஆகும் என்றும், அது நிலவின் வடகிழக்கு பகுதியில், 87 கி.மீ. குறுக்கே 2 கி.மீ. ஆழத்திற்கு மேல் உள்ள அட்லஸ் பள்ளத்தை இலக்காக கொண்டு நகரும் எனவும் ஐ-ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu