சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது
கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாக இருந்து வந்தது. அதன்படி நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ரூபாய் 54 ஆயிரத்து 560 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 6820 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 6800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது