எல்ஐசி க்கு 3 ஆண்டுகள் அவகாசம் வழங்கிய செபி - பங்கு மதிப்பு உயர்வு

May 15, 2024

பங்குச்சந்தை நடவடிக்கைகளின் ஒழுங்காற்று ஆணையமான செபி, எல்ஐசி நிறுவனத்துக்கு 10% பப்ளிக் ஷேர் ஹோல்டிங்கை எட்டுவதற்கு மேலும் 3 ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கான காலக்கெடு 2027 மே 16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 5% அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில் எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 931 ரூபாயாக இருந்தது. இது இன்றைய வர்த்தக நாளின் இடையில் […]

பங்குச்சந்தை நடவடிக்கைகளின் ஒழுங்காற்று ஆணையமான செபி, எல்ஐசி நிறுவனத்துக்கு 10% பப்ளிக் ஷேர் ஹோல்டிங்கை எட்டுவதற்கு மேலும் 3 ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கான காலக்கெடு 2027 மே 16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 5% அளவுக்கு உயர்ந்துள்ளது.

நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில் எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 931 ரூபாயாக இருந்தது. இது இன்றைய வர்த்தக நாளின் இடையில் 962 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. முன்னதாக, கடந்த 2022 இல், எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. தற்போது 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பப்ளிக் ஷேர் ஹோல்டிங் 10% ஆக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அதை எட்டுவதற்கு, எல்ஐசி நிறுவனத்துக்கு 2027 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu