சுப்ரீம் கோர்ட்டில் முக்கிய வழக்குகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுகள் மற்றும் தலைமை நீதிபதி அமர்வில் முக்கிய வழக்குகள் மட்டும் நேரடி ஒளிபரப்பாகின்றன. முன்னதாக யு.யு. லலித் தலைமை நீதிபதியாக இருந்தபோது, யூ டியூப் தளத்தில் இவை ஒளிபரப்பப்படுவது தொடங்கியது. விரைவில், சுப்ரீம் கோர்ட் அனைத்து அமர்வுகளிலும் வழக்குகளை தினசரி நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை கடந்த நாளில் முன்னெடுக்கப்பட்டது, அனைத்து அமர்வுகளின் வழக்கு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.