மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் நகராட்சிக்குட்பட்ட 224.24 ஏக்கர் பரப்பளவில் 1977.80 கோடியில் தரம் வாய்ந்த எய்ட்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு ஆண்டுகள் ஆகியும் பணி தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தில் இருந்து நிதி கிடைத்ததை அடுத்து 18ஆம் தேதி வரை ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டது. இதனை 33 மாதங்களில் கட்டி முடிப்பதற்காக நிபந்தனைகள் கூறப்பட்டுள்ள நிலையில் இதற்கான டெண்டர் பெறுவதற்கான கால அவகாசம் அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.