ஓடும் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூரில் இருந்து மராட்டியம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று, பகல்கர் ரயில் நிலையத்திற்கு வந்த போது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர், சக வீரர் மற்றும் ரயில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், மற்றொரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மற்றும் 3 ரயில் பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஓடும் ரயிலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. […]

ஜெய்ப்பூரில் இருந்து மராட்டியம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று, பகல்கர் ரயில் நிலையத்திற்கு வந்த போது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர், சக வீரர் மற்றும் ரயில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், மற்றொரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மற்றும் 3 ரயில் பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஓடும் ரயிலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின், டசிசர் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்த தப்பி ஓடிய அவர், நீண்ட தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த மற்றொரு ரயில்வே பாதுகாப்பு படை வீரரின் குடும்பத்தினருக்கு 15 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu