மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம், அமெரிக்காவில் வெளியாகும் தனது கார்களில், சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் மெர்சிடிஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் கார்களின் புதிய மென்பொருள் மேம்படுத்தலுடன் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் புகுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மெர்சிடிஸ் கார்களில் வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளது. அதை பயன்படுத்தி, ஓட்டுனர்கள் காரை இயக்க முடியும். தொலைபேசி அழைப்புகள், மேப் மற்றும் நேவிகேஷன் அம்சங்களை வாய்ஸ் கமாண்டுகள் மூலம் செயல்படுத்த முடியும். தற்போது, இந்த வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்தில், சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு புகுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “மெர்சிடிஸ் கார்களின் MBUX அமைப்பில் சாட்ஜிபிடி இணைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், அமெரிக்காவில் இந்த அம்சத்தை கொண்டுள்ள 9 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, விரைவில் சாட் சாட்ஜிபிடி தொழில்நுட்பம் கிடைக்கப்பெறும்” என சொல்லப்பட்டுள்ளது.