புதன் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் ஆழத்தில் அதிக அளவிலான வைரம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் இது தொடர்பான விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பொதுவாக, கடல் போன்ற எரிமலை குழம்புகள் குளிரூட்டப்பட்டதால் பூமி போன்ற கிரகங்கள் உருவாகியதாக கூறப்படுகிறது. அந்த வகையில், புதன் கிரகத்தில் காணப்பட்ட எரிமலை குழம்புகளில் சிலிகேட் மற்றும் கார்பன் அதிக அளவில் இருந்துள்ளது. இந்த நிலையில், அங்கு காணப்படும் வெப்பநிலை காரணமாக அங்குள்ள கார்பன் வைரமாக மாறி இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட 485 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த வைரங்கள் காணப்படுகின்றன. ஆனால், புதன் கிரக மேற்பரப்பில் வெப்பநிலை அதிக அளவில் உள்ளது. எனவே, இந்த வைரங்களை சுரங்கம் தோண்டி வெட்டி எடுக்க முடியாது என்று கூறுகின்றனர்.














