மியாமி ஓபன்: யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் யூகி பாம்ப்ரி மற்றும் நுனோ போர்ஜஸ் ஜோடி காலிறுதியில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது, இதில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, பிரிட்டனின் லாய்ட் கிளாஸ்போல் மற்றும் ஜூலியன் காஷ் ஜோடியுடன் மோதின. முதல் செட்டில் 6-7 […]

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் யூகி பாம்ப்ரி மற்றும் நுனோ போர்ஜஸ் ஜோடி காலிறுதியில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது, இதில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, பிரிட்டனின் லாய்ட் கிளாஸ்போல் மற்றும் ஜூலியன் காஷ் ஜோடியுடன் மோதின.

முதல் செட்டில் 6-7 (1-7) என இழந்த பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் ஜோடி, அடுத்த செட்டில் 6-3 என வென்றது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் பிரிட்டன் ஜோடி 10-8 என கைப்பற்றியது. இதன்மூலம், யூகி பாம்ப்ரி மற்றும் நுனோ போர்ஜஸ் ஜோடி காலிறுதியில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu