மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளத்தில் புதிதாக தொலைபேசி அழைப்புகள் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்துள்ளது.மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளத்தை, அலுவல் சார்ந்த பணிகளுக்கு பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர, கான்ஃபரன்ஸ் அழைப்புகளுக்கு இது பயன்படுகிறது. இந்த நிலையில், புதிதாக தொலைபேசி அழைப்புகளை இதனுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்ற புதிய அம்சம், இந்தியாவில் முதல் முறையாக கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம், கைப்பேசி மற்றும் லேண்ட்லைன் பயனர்களை ஒரே தளத்தில் இணைக்க முடியும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் உடன் இந்த புதிய திட்டத்தில் இணைந்தது குறித்து ஏர்டெல் நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது இந்திய அலுவலகங்களில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.