ஹல்மஹேரா தீவுக்கு அருகில் உள்ள விமானங்களுக்கு பறக்க தடை விதிக்கப்பட்டது.
இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால், அங்கு பல எரிமலைகள் இயங்குகின்றன. அவை அடிக்கடி வெடித்து ஆபத்தை உருவாக்குகின்றன. இந்த நிலையில், மலுகு மாகாணத்தில் உள்ள ஹல்மஹேரா தீவின் டுகோனோ எரிமலை நேற்று வெடித்து, 5 கிலோ மீட்டர் உயரம் வரை தீக்குழம்புகள் பரவின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. இதனை தொடர்ந்து, ஹல்மஹேரா தீவுக்கு அருகில் உள்ள விமானங்களுக்கு பறக்க தடை விதிக்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.














