நாசாவின் வைபர் நிலவு ரோவர் பணிகள் மும்முரம்

நாசாவின் அடுத்த கட்ட நிலவு திட்டம் வைபர் என பெயரிடப்பட்டுள்ளது. VIPER என்பது Volatiles Investigating Polar Exploration Rover என்பதன் சுருக்கமாகும். நிகழாண்டு இறுதியில் இந்த ரோவர் நிலவுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ரோவரை உருவாக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வைபர் திட்டத்தின் திட்ட இயக்குனர் டான் ஆண்ட்ரூஸ், ரோவரின் 80% வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளார். நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வதற்காக வைபர் ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிலவில் தண்ணீர், […]

நாசாவின் அடுத்த கட்ட நிலவு திட்டம் வைபர் என பெயரிடப்பட்டுள்ளது. VIPER என்பது Volatiles Investigating Polar Exploration Rover என்பதன் சுருக்கமாகும். நிகழாண்டு இறுதியில் இந்த ரோவர் நிலவுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ரோவரை உருவாக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வைபர் திட்டத்தின் திட்ட இயக்குனர் டான் ஆண்ட்ரூஸ், ரோவரின் 80% வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வதற்காக வைபர் ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிலவில் தண்ணீர், பனி உள்ளிட்ட வளங்கள் உள்ளதா என்பதை அறிவதற்காக இது அனுப்பப்படுகிறது. அத்துடன், இந்த திட்டம் ஆர்டெமிஸ் திட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு, நிலவின் தென் துருவப் பகுதியில் சுற்றித் திரிந்து வைபர் ரோவர் தகவல்களை சேகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu