நேபாளத்தில் பிரசண்டா அரசு கவிழும் நிலை

July 3, 2024

நேபாள பிரதமர் புஷ்பா கமல் தாஹல் பிரசண்டாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நேபாள காங்கிரஸ் கட்சியும் சிபிஎன்யு எம்எல் கட்சியும் தற்போது இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைக்க முற்பட்டுள்ளதுதான். நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பகதூர் கம்யூனிஸ்ட் கட்சியான நேபாளம் ஒருங்கிணைந்த மார்ச் கட்சியுடன் இணைந்து தேசிய ஒருமித்த அரசு அமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக பிரசண்டா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை […]

நேபாள பிரதமர் புஷ்பா கமல் தாஹல் பிரசண்டாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் நேபாள காங்கிரஸ் கட்சியும் சிபிஎன்யு எம்எல் கட்சியும் தற்போது இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைக்க முற்பட்டுள்ளதுதான். நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பகதூர் கம்யூனிஸ்ட் கட்சியான நேபாளம் ஒருங்கிணைந்த மார்ச் கட்சியுடன் இணைந்து தேசிய ஒருமித்த அரசு அமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக பிரசண்டா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று பிரசண்டா அறிவித்துள்ளார். அதோடு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நேபாள பாராளுமன்ற அரசியலமைப்பின்படி அந்நாட்டு பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முப்பது நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்படும். எனவே பிரசண்டாவிற்கு கால அவகாசம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu