நியூரோலிங் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. முதன் முதலாக நோலண்ட் அர்பாக் என்ற நபருக்கு மூளையில் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நியூரோலிங் சிப்பினை ஹேக் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நோலண்ட் அர்பாக், பக்கவாதம் பாதிக்கப்பட்ட நபர் ஆவார். அவரது மூளையில் சிப் பொருத்தப்பட்டுள்ளதால், அவரால் கணினியை இயக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினியில், சமூக வலைதளங்களை பயன்படுத்துவது, பல்வேறு வலைதளங்களில் சேவைகளை பெறுவது, ஆர்டர் செய்வது போன்றவற்றை செய்ய முடிவதாக நோலண்ட் தெரிவித்துள்ளார். மேலும், தனது மூளையில் உள்ள சிப்பை ஹேக் செய்து மூளையின் சிக்னல்கள் உள்ளிட்ட சில தகவல்களை பெற முடியும் என்று கூறியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த சிப் பரிசோதனை தொடரும் என நியூரோலிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டாவதாக மற்றொரு நபருக்கு சிப் பொருத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளது.