நெடுஞ்சாலை கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்ப முறைகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை கட்டணங்கள் தற்போது சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இனி இவை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வசூலிக்க பட உள்ளதாகவும், இந்த புதிய முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. மேலும் தானியங்கி முறையில் வாகனங்களை நிறுத்தாமல் கட்டணத்தை வசூலிக்கும் வகையில் நவீன கேமராக்களை அமைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.














