தொழிலாளர் நலனும் வணிக வளர்ச்சியும் ஒருசேரும் வகையில், தெலுங்கானா அரசு வேலை நேரத்தில் முக்கிய மாற்றம் செய்துள்ளது.
அரசின் புதிய உத்தரவின் படி, கடைகள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் தினசரி வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் வாரத்துக்கு 48 மணி நேரத்தை மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்ற நிலையான விதிமுறை தொடரும். தொழிலாளர்கள் தொடர்ந்து 6 மணி நேரம் வேலை செய்தால், குறைந்தது 30 நிமிட இடைவேளை வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றம் தொழிலாளர்களின் நலனைக் கவனித்தும், வணிக உற்பத்தியை அதிகரிப்பதற்குமான முயற்சியாகவும் விளக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலமும் இதை அமல்படுத்தியுள்ளது.