நைஜர் நாட்டில் நடைபெற்ற ராணுவப் புரட்சியின் மூலம் அங்கு ஆட்சியை ராணுவ தலைவர் கைப்பற்றினார். அதன் பின்னர் தன்னை புதிய அதிபராக அறிவித்துக் கொண்டார். இந்த ஆட்சி மாற்றத்தை உலக நாடுகள் பலரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலயில் நைஜர் நாட்டின் தலைநகரம் நியாமில் அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்த சென்றனர்.அவர்களை புதிய ஆட்சியின் அதிபர் சந்திக்க விடவில்லை. மேலும் இந்த சந்திப்பில் ஆட்சி மாற்றத்திற்கு துணை நின்ற ராணுவ அதிகாரிகள், இராணுவ ஜெனரல் அமெரிக்காவில் பயிற்சி பெற்றவரும் பங்கேற்றனர்.
2 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு அமெரிக்க அரசாங்கத்தில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அதிபரை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை. அவர் வீட்டுக்காவலில் இருப்பதாக நினைக்கிறோம். நைஜர் ஜனநாயகம் மீண்டும் திரும்ப பெறவில்லை என்றால் நைஜர் நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.














