அக்டோபர் 7 தாக்குதலில் சீனா, ரஷ்யாவுக்கு தொடர்பு - நிக்கி ஹேலி

May 29, 2024

இஸ்ரேலில் கடந்த அக்டோபர் ஏழாம் தேதி அன்று ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் துணை நின்றதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐ.நாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் குற்றம் சுமத்தியுள்ளார். நிக்கி ஹேலி இஸ்ரேல் தாக்குதலால் சேதம் அடைந்த நீர் ஆஸ் பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பயிற்சி அளித்தது. இந்த தாக்குதலுக்கு தேவையான உதவிகளை ரஷ்யா […]

இஸ்ரேலில் கடந்த அக்டோபர் ஏழாம் தேதி அன்று ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் துணை நின்றதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐ.நாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிக்கி ஹேலி இஸ்ரேல் தாக்குதலால் சேதம் அடைந்த நீர் ஆஸ் பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பயிற்சி அளித்தது. இந்த தாக்குதலுக்கு தேவையான உதவிகளை ரஷ்யா வழங்கியது. சீனா நிதி உதவி அளித்தது. எனவே அந்த படுகொலையில் ஹமாஸ் மட்டுமின்றி இந்த மூன்று நாடுகளும் பங்கேற்றுள்ளன. இந்த தாக்குதலை நாம் அலட்சியம் செய்தால் அமெரிக்காவிலும் இதே போன்ற தாக்குதலை இந்த நாடுகள் நடத்துவர். இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் எதையும் நிக்கி ஹேலி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu