ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. செலவுகளை குறைக்கும் நோக்கில் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் வரும் வாரங்களில் 400 முதல் 500 பேர் நீக்கப்படுகின்றனர். ஓலா நிறுவனத்தின் ஐபிஓ விரைவில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு, செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஈடாக, குறைந்த ஊதியத்தில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. பணி நீக்கம் தவிர நிறுவனத்தின் இதர செலவுகளை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.