ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று புதுச்சேரி சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், புதுவை மாநிலத்தில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மூழ்குவதும், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே புதுவை மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது சம்பந்தமாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை அரசின் தீர்மானமாக இயற்றி, கவர்னர் ஒப்புதலோடு மத்திய அரசிற்கு அனுப்ப வேண்டும் என்றார்.