என்சிஇஆர்டி கவுன்சிலின் கீழ் அச்சிடப்படும் புத்தகங்களில் இனி இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை இடம்பெற உள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிங் குழுமத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாட புத்தகங்களிலும் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை இனி இடம்பெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 12 ஆம் வகுப்பு பாட புத்தகத்திலும் பாரத் என்ற பெயரை சேர்க்க என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.














