திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலை மேம்படுத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறையும், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஹெச்சிஎல்லும் இணைந்து 300 கோடி ரூபாய் செலவில் மெகா மேம்பாட்டு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், திருக்கோயில் வளாகத்தில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட பக்தர்களின் செல்போன் பாதுகாக்கும் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்துள்ளார்.