இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது ஊழல் வழக்குப் பதிவு

December 2, 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அந்த நாட்டின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது. சுமார் 2000 கோடி மதிப்பிலான ஊழல் முறைகேடு புகாரில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பிபி, இம்ரான் […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அந்த நாட்டின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது. சுமார் 2000 கோடி மதிப்பிலான ஊழல் முறைகேடு புகாரில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பிபி, இம்ரான் கான் மனைவியின் தோழி பருகத் ஷாஜாதி மற்றும் இம்ரான் கான் கட்சியின் முக்கிய தலைவர் புகாரி உட்பட எட்டு பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பாக அல்காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் இரண்டு வார நீதிமன்ற காவலில் இம்ரான் கானை வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கானிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் இன்று விரிவான விசாரணை நடத்த உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி பெற்ற பிறகு இது நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu