பாகிஸ்தான் பணவீக்கம் 38% ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் அங்கு உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் அந்த நாட்டின் பணவீக்கம் 36.4 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில் ஒரே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.6 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த பணவீக்க சதவீதம் இலங்கையைவிட அதிகமாகும். மேலும் இந்த சதவீதம் வரும் ஜூன் மாதம் குறையலாம் என்று கூறப்பட்டுள்ளது.














