உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க கோரிய மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

November 30, 2022

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில், உயர்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், எளிமையான தீர்வுகளை கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கான தீர்வை […]

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில், உயர்நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், எளிமையான தீர்வுகளை கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கான தீர்வை காண முடியாது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 160 நீதிபதிகளை நியமிக்க முடியாதபோது, 320 நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்கிறீர்கள். பார்க்கும் தீமைக்கெல்லாம் தீர்வுகாண பொதுநல மனு தேவை இல்லை என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu