கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டியாக இண்டஸ் ஆப் ஸ்டோர் அறிமுகம்

February 23, 2024

கைபேசியில் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு போட்டியாக, இண்டஸ் ஆப் ஸ்டோர் என்ற பெயரில் புதிய தளத்தை போன் பே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. போன் பே செயலியின் புதிய வெர்ஷனில் இண்டஸ் ஆப் ஸ்டோர் தளத்துக்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி இண்டஸ் ஆப் ஸ்டோர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, இண்டஸ் ஆப் ஸ்டோர் செயலியில் இருந்து மற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம். […]

கைபேசியில் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு போட்டியாக, இண்டஸ் ஆப் ஸ்டோர் என்ற பெயரில் புதிய தளத்தை போன் பே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

போன் பே செயலியின் புதிய வெர்ஷனில் இண்டஸ் ஆப் ஸ்டோர் தளத்துக்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி இண்டஸ் ஆப் ஸ்டோர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, இண்டஸ் ஆப் ஸ்டோர் செயலியில் இருந்து மற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம். கிட்டத்தட்ட 2 லட்சம் செயலிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் உட்பட மொத்தம் 12 மொழிகளில் இண்டஸ் ஆப் ஸ்டோர் சேவை வழங்கப்படுகிறது. இண்டஸ் ஆப் ஸ்டோரில் தங்கள் செயலியை பட்டியலிட, முதல் ஒரு வருட காலத்துக்கு டெவலப்பர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இணைந்து இன்பில்ட் வகையில் இண்டஸ் ஆப் ஸ்டோர் செயலியை கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக போன் பே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சமீர் நிகாம் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu