ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 46 பேர் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சியினர் இப்போது கடுமையாக பிரசாரம் செய்து, தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்கள். இந்நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதற்கு 256 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.