தமிழ்நாட்டின் 3 நிலக்கரி பகுதிகள் ஏல பட்டியலில் இருந்து நீக்கம்

தமிழ்நாட்டின் 3 நிலக்கரி பகுதிகள் ஏல பட்டியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி அமைச்சகம் மார்ச் 29-ம் தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்று இருந்தன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும். இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் […]

தமிழ்நாட்டின் 3 நிலக்கரி பகுதிகள் ஏல பட்டியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

நிலக்கரி அமைச்சகம் மார்ச் 29-ம் தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்று இருந்தன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும். இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பட்டியலில் இருந்து தமிழ்நாடு பகுதிகளை நீக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்க கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் ஒன்றிய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட ஏல பட்டியலிலிருந்து 3 பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஏல பட்டியலில் தமிழ்நாடு பகுதிகளை தவிர நாடு முழுவதும் 98 இடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu