தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தின் போது போதிய மழை பெய்யாதால், அக்டோபர் மாதம் மேட்டூர் அணை மூடப்பட்டது. இதில் குறுவை அறுபடியை விவசாயிகள் இருக்கும் தண்ணீரை வைத்து அறுவடையை செய்தனர். அதே நேரத்தில் சாம்பா சாகுபடிக்கும் போதிய மழை பெய்யாத காரணத்தினால் அதிக விளைச்சல் ஏற்படவில்லை. இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தமிழகத்திற்கு அரிசி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களாகவே அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் புழுங்கல் அரிசி 60க்கு விற்ற நிலையில் தற்போது 68 ஆக உயர்த்துள்ளது. மேலும் 60க்கு விற்ற வேகவைத்த அரிசி 70 ஆகவும், பாஸ்மதி அரிசி 120 ஆகவும், பழுப்பரிசி 39க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரூபாய் 37 க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி 40 ஆக உள்ளது. பிராண்டட் அரிசி கிலோவிற்கு 10 வரை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சில்லறை விற்பனை அரிசி விலை கிலோவிற்கு 15 முதல் 17 வரை உயர்ந்துள்ளது. இதனால் உணவகங்களிலும் இட்லி தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.