வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட பிரதமர்; உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்கள் கடந்த சில நாட்களாக கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் சேதமடைந்து, பொதுமக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பிறகு இமாச்சலப் பிரதேசம் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தாக்கம் அதிகமாக இருந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
பார்வைக்கு பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.1500 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என தெரிவித்தார். இமாச்சலப் பிரதேச பயணத்தை முடித்த பிரதமர், இன்று மாலை பஞ்சாப் மாநிலத்திற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.