ஆந்திர மாநில அரசு போன் ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.
ஆந்திராவில் போன் ஹெட்செட் மாட்டி செல்வதால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மாநில அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அதன்படி இயர் போன், போன் ஹெட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை அதிகமாக விதிக்க வேண்டும். இதன்மூலம் விபத்துக்களை குறைக்க முடியும் என தெரிவித்து இருந்தனர். போலீசாரின் அறிக்கையை பரிசீலனை செய்த மாநில அரசு போன் ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.
வரும் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் கார், பைக், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ஹெட்செட் மாட்டி இருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














