ரஷ்யாவில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்தனர்.
ரஷ்யாவில் பயணிகள் ரயில் ஒன்றின் ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டு விபத்தானது. இதில் 70 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்த ரயில் ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர் குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியில் உள்ள நோவாரோஸிஸ்க் நகர் வரையிலான ஐந்தாயிரம் கிலோமீட்டர் தொலைவை கடந்து செல்கிறது. அந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருந்தன. மொத்தம் 232 பயணிகள் பயணம் செய்தனர். கன மழை பெய்தால் அந்த ரயில் தடம் புரண்டது என்று கூறப்பட்டுள்ளது.