புதின் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று உச்சி மாநாட்டில் பங்கேற்க ஒப்புக்கொண்டார்.
ரஷியாவின் ஜனாதிபதி புதின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக புதின் கூறியதாக, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள இருதரப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடியின் அழைப்பை ரஷிய அதிபர் புதின் ஏற்றுள்ளார் என ரஷிய அதிபரின் மாளிகையான கிரம்ளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.