எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்திய அகாடமி விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு 1954 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியாகி உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை பெருமைப்படுத்தும் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி வருகிறது.தற்போது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதுகளை நேற்று அறிவித்துள்ளது. அதில் தமிழில் எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி the black hill என்ற நாவலை தமிழில் கருங்குன்றம் என்ற பெயரில் மொழிபெயர்த்ததற்கு சாகித்திய அகாடமி விருதை அறிவித்துள்ளது. இவர் பல்வேறு மொழியில் இருந்து எனது அரசியல் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 185, இந்தியாவின் தேசிய பண்பாடு உள்ளிட்ட நூல்களை மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.