நியூயார்க்கில் தீபாவளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை

June 27, 2023

இனி நியூயார்க்கிலும் தீபாவளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது நியூயார்க்கில் வசித்துவரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் தீபாவளி தின சட்டம்" எனும் சட்டத்தின் கீழ், அமெரிக்காவில், கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற விடுமுறை தினங்களில், இனி தீபாவளி தின விடுமுறை, 12-வது விடுமுறையாக சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், தீபாவளியை கூட்டாட்சி விடுமுறையாக மாற்றுவதற்கான மசோதாவை காங்கிரஸில் மெங் […]

இனி நியூயார்க்கிலும் தீபாவளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது நியூயார்க்கில் வசித்துவரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் தீபாவளி தின சட்டம்" எனும் சட்டத்தின் கீழ், அமெரிக்காவில், கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற விடுமுறை தினங்களில், இனி தீபாவளி தின விடுமுறை, 12-வது விடுமுறையாக சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், தீபாவளியை கூட்டாட்சி விடுமுறையாக மாற்றுவதற்கான மசோதாவை காங்கிரஸில் மெங் அறிமுகப்படுத்தினார். அதன்படி தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த செய்தி மிகவும் மகிச்சியான ஒன்றாக அமைந்திருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu