புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் - அமித்ஷா அறிவிப்பு

வரும் மே 28ஆம் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய கட்டிடத்தில், தமிழகத்தில் இருந்து ஆதினக் குழு டெல்லிக்கு வருகை தந்து, செங்கோல் ஒன்றை பிரதமரிடம் ஒப்படைக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், 1947 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை இந்தியர்களிடம் ஒப்படைக்கும் விதமாக, பிரதமர் நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில், 'வேயுறு […]

வரும் மே 28ஆம் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய கட்டிடத்தில், தமிழகத்தில் இருந்து ஆதினக் குழு டெல்லிக்கு வருகை தந்து, செங்கோல் ஒன்றை பிரதமரிடம் ஒப்படைக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், 1947 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை இந்தியர்களிடம் ஒப்படைக்கும் விதமாக, பிரதமர் நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில், 'வேயுறு தோளி பங்கன்' தேவார திருப்பதிகத்தை தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் பாடி, செங்கோலை நேருவிடம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மரபின்படி, இந்த முறை செங்கோல் வழங்கப்பட உள்ளதாக உறுதி செய்துள்ளார்.

மேலும், தமிழக மன்னர்கள், தங்கள் ஆட்சியின் முக்கிய அங்கமாக செங்கோலை கருதியதாக கூறி, செங்கோலின் முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும், சோழர் காலத்தில் பயன்படுத்தியது போன்ற செங்கோலை வடிவமைத்துள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை, நவீன நாகரிகத்துடன் இணைக்கும் அழகான முயற்சியாக நாடாளுமன்ற கட்டிடம் உள்ளது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu