நடப்பு நிதியாண்டின் இறுதி நாளான இன்று, இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் ஏற்றம் காரணமாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1031.43 புள்ளிகள் உயர்ந்துள்ளது. நெடு நாட்களுக்குப் பிறகு, 1000 புள்ளிகளைத் தாண்டி குறியீடுகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், சென்செக்ஸ் 58991.52 ஆக பதிவாகியுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 279.05 புள்ளிகள் உயர்ந்து 17359.75 ஆக நிலை கொண்டுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பாஷ், டாக்டர் ரெட்டிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒரு வருட உயர்வை பதிவு செய்துள்ளன. இது தவிர, ரிலையன்ஸ், நெஸ்லே, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை உயர்வை பதிவு செய்துள்ளன. அதே வேளையில், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், சன் பார்மா, மாருதி சுசுகி, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்துள்ளன.














