ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சேவை கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ளது.
ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட 26% அளவுக்கு சேவை கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் விலை குறைப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் பலர் பிஎஸ்என்எல் சேவைகளுக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் மாதாந்திர கட்டணத்தோடு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மாதாந்திர கட்டணத்தை ஒப்பிட்டு பார்க்க பொதுமக்கள் பலர் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விலைகுறைப்பு நடவடிக்கை தொலைதொடர்பு சேவை துறையில் மாற்றங்களை கொண்டு வரலாம் என கருதப்படுகிறது.














