சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநருக்கு விரைவில் விளக்கம்

September 3, 2022

சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து ஆளுநருக்கு விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் துணை வேந்தர் நியமனங்களையும் தமிழக அரசே மேற்கொள்ளும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து […]

சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து ஆளுநருக்கு விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் துணை வேந்தர் நியமனங்களையும் தமிழக அரசே மேற்கொள்ளும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் சில விளக்கங்களைக் கேட்டு தமிழக மருத்துவத்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்ததார். பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கும் உள்ள நிலையில், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மட்டும் தமிழக அரசு எப்படி நியமனங்களை மேற்கொள்ளும் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கான பதில்களை இன்னும் ஒருசில நாட்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu